முகப்பு Gadgets பேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி?

பேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி?

425
0

இந்தியாவில் பிரபலமான டிஜிட்டல் பேமென்ட் சேவை வழங்கும் நிறுவனமாக பேடிஎம் இருக்கிறது. மேலும் இந்தியாவின் முன்னணி மொபைல் பேமென்ட் மற்றும் இணைய வர்த்தக தளமாக பேடிஎம் விளங்குகிறது. பயனர்கள் பல்வேறு பரிமாற்றங்களை பேடிஎம் மூலம் மேற்கொள்ள முடியும்.

இவற்றை செய்யும் முன் பயனர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் உள்ள பணத்தை டிஜிட்டல் வாலெட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து பரிமாற்றங்களும் பாதுகாப்பாகவும், என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.

இந்த பணத்தை கொண்டு சிறிய கடைகள், டாக்சி, மின்சார கட்டணம், மெட்ரோ ரீசார்ஜ், உணவகங்கள், போஸ்ட்பெயிட் பில், மொபைல் ரீசார்ஜ்கள் மற்றும் ஒரு வாலெட்டில் இருந்து மற்றொரு வாலெட்-க்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.

You May Like This

இத்துடன் பேடிஎம் கொண்டு திரைப்பட டிக்கெட்கள், ரெயில் டிக்கெட், விமான டிக்கெட் மற்றும் பல்வேறு இதர பொருட்களை பேடிஎம் ஆப் அல்லது வலைதளத்தில் இருந்து வாங்க முடியும்.

பேடிஎம் பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியவை:

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! பேடிஎம் பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியவை:

ஆன்ட்ராய்டு ஐஓஎஸ் சாதனங்களில் பேடிஎம் கிடைக்கிறது, பயனர்கள் பேடிஎம் வலைதளம் www.paytm.com சென்று இவற்றை டவுன்லோடு செய்யலாம்

1. முதலில் பேடிஎம் செயலியை குறிப்பிட்ட இயங்குதளத்திற்கா பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.

– ஆன்ட்ராய்டு பயனர்கள்: கூகுள் பிளே ஸ்டோர் சென்று பேடிஎம் ஆப்

-ஐ தேடி அதனை இன்ஸ்டால் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

– ஐபோன்/ ஐபேட் பயனர்கள்: ஆப்ஸ்டோர் சென்று பேடிஎம் ஆப்

-ஐ தேடி அதனை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

– மற்றவர்கள்: மிக எளிமையாக m.paytm.com வலைதள முகவரிக்கு எவ்வித பிரவுசர் மூலமாகவும் செல்லலாம்.

2. சீராக வேலை செய்யும் இன்டர்நெட் இணைப்பு அவசிய.

3. லாக் இன் ஐடி (login ID) மற்றம் பாஸ்வேர்டு (password) உங்களது மொபைல் நம்பர் மூலம் உருவாக்க வேண்டும்.

4. செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ததும், உங்களது லாக்-இன் விவரங்களை கொண்டு லாக் இந் செய்யலாம்.

பேடிஎம் வாலெட்டில் பணத்தை சேர்த்து பாஸ்புக்-ஐ பார்ப்பது எப்படி?

பேடிஎம் வாலெட்டில் பணத்தை சேர்த்து பாஸ்புக்-ஐ பார்ப்பது எப்படி?

1. பேடிஎம் ஆப் அல்லது வலைதளம் சென்று ஆட் மனி (Add Money) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

2. இனி, நீங்கள் சேர்க்க வேண்டிய பணத் தொகையை பதிவு செய்து, ஆட் மனி (Add Money) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

3. இனி உங்களுக்கு வேண்டிய வழிமுறையில் பண பரிமாற்றத்தை நிறைவு செய்யலாம்.

4. பண பரிமாற்றத்தை நிறைவு செய்ததும், நீங்கள் சேர்த்த பணம் உங்களது பாஸ்புக் பகுதியிஸல் தெரியும்.

5. பாஸ்புக்கை பார்க்க, செயலி அல்லது வலைதளத்தில் உள்ள பாஸ்புக் செக்ஷனில் பார்க்க முடியும்.

பேடிஎம் மூலம் பணம் செலுத்துவது எப்படி?

பேடிஎம் மூலம் பணம் செலுத்துவது எப்படி?

1. பே ஆப்ஷனை க்ளிக் செய்து, நீங்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் நம்பரை பதிவு செய்தோ அல்லது பணத்தை பெறுவோரின் பேடிஎம் செயலியில் உள்ள க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்யலாம்.

2. நீங்கள் அனுப்ப வேண்டிய பணத் தொகையை பதிவு செய்து பே பட்டனை க்ளிக் செய்தால் பணம் அனுப்பப்பட்டு விடும்.

3. பயனர்கள் பணத்தை நேரடியாக தங்களின் பேடிஎம் வாலெட் அல்லது வங்கி கணக்கில் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, பயனர்கள் பல்வேறு சேவைகளுக்கு பேடிஎம் மூலம் பணம் செலுத்தலாம்.

பேடிஎம் மூலம் பணம் செலுத்துவது/ரீசார்ஜ்/முன்பதிவு செய்வது எப்படி?

பேடிஎம் மூலம் பணம் செலுத்துவது/ரீசார்ஜ்/முன்பதிவு செய்வது எப்படி?

1. செயலி அல்லது வலைதளத்தில் உள்ள சேவையை தேர்வு செய்ய வேண்டும்.

2. இனி நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய சேவைக்கான ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். ஒருவேளை மொபைல் ரீசார்ஜ் செய்ய வேண்டுமெனில் அதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்து போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

3. அடுத்து போன் நம்பரை பதிவு செய்து நெட்வொர்க் ஆப்பரேட்டரை தேர்வு செய்யலாம்.

4. இனி, பணத்தை பதிவு செய்தோ அல்லது பிளான்களில் ஒன்றையோ தேர்வு செய்து புதிய ஆஃபர்களை க்ளிக் செய்ய வேண்டும்.

5. இனி ரீசார்ஜ் செய்யக்கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்து பரிமாற்றத்தை நிறைவு செய்யவாம்.

குறிப்பு: நீங்கள் தேர்வு செய்த தொகை, வாலெட்டில் இல்லையெனில் பணத்தை மற்ற பேமென்ட் வழிமுறை மூலம் நிறைவு செய்யலாம்.

You May Like This