முகப்பு Gadgets சாம்சங் கேலக்ஸி நோட் 9: இணையத்தில் கசிந்த தகவல்!

சாம்சங் கேலக்ஸி நோட் 9: இணையத்தில் கசிந்த தகவல்!

409
0
சாம்சங் கேலக்ஸி நோட் 9 குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் மற்றும் அம்சங்கள், புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

கேலக்ஸி நோட் 8 போன்றே நோட் 9 ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவில் பிளாக் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம்.

இதன் கேமரா சென்சார்கள் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றும், 4000 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டிருக்கலாம். அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படலாம் மேலும், மேம்படுத்தப்பட்ட எஸ் பென், மியூசிக் பிளேபேக் கன்ட்ரோல், செல்பி டைமர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி நோட் 9 மாடல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வெளியிட இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

You May Like This