முகப்பு Lifestyle Beauty நீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா?

நீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா?

536
0

அலர்ஜி எப்போது எதனால் ஏற்படும் என்று நம்மால் சொல்லவே முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. உடலில் அதிகப்படியான அல்லது நமக்கு ஒவ்வாத கெமிக்கல்கள் சேர்க்கும் போது அலர்ஜி ஏற்படுகிறது.

நம்முடைய உணவுகளில் கெமிக்கல் சேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தாண்டி அலங்காரம் என்ற பெயரில் நேரடியாக கெமிக்கல்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று தான் ஹேர் டை. இன்றைக்கு இளம் தலைமுறையினருக்கு நரை முடி வருவதை பார்க்க முடிகிறது. பலரும் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். அதைத் தவிர ஹேர் கலரிங் செய்வதும் இன்றைய ஃபேஷன் உலகில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டிறுக்கிறது.

ஹேர் டை :

முடிக்கு நிறமேற்றும் எல்லா கெமிக்கல்களிலும் அடிப்படையாக சில விஷயங்கள் ஒன்று தான். அதில் அதிகப்படியான பாராபெனிலினிடியாமைன் என்ற கெமிக்கல் கலந்திருக்கிறது. இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். அதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும்.

You May Like This

இதன் அறிகுறிகளாக தலையில் அரிப்பு, எரிச்சல், கண் இமைகள், காது, முகம், கழுத்து ஆகிய பகுதிகள் சிவந்து போவது, முகம் வீங்குவது ஆகியவை ஏற்படும். இரண்டு நாட்களிலிருந்து ஒரு வாரம் வரையிலும் இந்த அலர்ஜி இருக்கும் அதையும் தாண்டி நீடித்தாலோ அல்லது பெரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தினாலோ அலர்ஜியுடன் காய்ச்சலும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அலர்ஜி ஏற்பட்ட சமயத்தில் வீட்டிலேயே நீங்கள் செய்ய வேண்டிய சில அடிப்படை விஷயத்தை பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள் .

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் நான்கு டேபிள் ஸ்பூன் அளவு தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அதனை அலர்ஜி பாதித்த இடங்களில் தடவுங்கள். தலை முழுவதும் ஹேர் பேக்காக போடலாம். அதன் பிறகு அரை மணி நேரம் வரையிலும் ஊற வைத்திட வேண்டும்.

ஹேர் வாஷ் :

ஹேர் வாஷ் :

அரை மணி நேரம் காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி பின்னர் ஷாம்பு போடுங்கள். இதன் போது நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவில் குறைந்த அளவிலான சல்ஃபேட் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்திடலாம். எலுமிச்சை சாற்றில் அதிகப்படியான ஆண்ட்டிசெப்டிக் மற்றும் ஆஸ்டினரிங்கெண்ட் துகள்கள் இருக்கிறது. இதனுடன் தயிரும் சேர்வதால் அலர்ஜியை உடனடியாக கட்டுப்படுத்தும்.

ஜோஜோபோ ஆயில் :

ஜோஜோபோ ஆயில் :

உங்களுக்கு தேவையான அளவு ஜோஜோபோ ஆயிலை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை லேசாக சூடுபடுத்தி தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இரவு அப்ளை செய்து கொண்டால் இரவு முழுவதும் தலையில் அந்த எண்ணெய் இருக்கட்டும் மறு நாள் காலையில் குளிர்ந்த நீரில் குளித்திடலாம். அரிப்பு,வீக்கம், சிவந்து போவது போன்ற அறிகுறிகளை இது குறைத்திடும்.

கற்றாழை :

கற்றாழை :

இயற்கையாகவே இதற்கு குளிர்ச்சித்தன்மை இருக்கிறது. தலையில் ஏற்படுகிற அலர்ஜி என்றல்ல உடலில் எங்கு அலர்ஜி ஏற்பட்டாலும் இதனைத் தடவலாம். இதில் சேர்க்கவேண்டியது எதுவும் இல்லை. நேரடியாக கற்றாழை ஜெல் எடுத்துக் கொண்டு அதனை தலை முழுவதும் அப்ளை செய்திடுங்கள் இதைத் தவிர உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டிருக்கும் பகுதிகளிலும் தடவலாம். 20 நிமிடங்கள் வரை ஊறியதும் அப்படியே கழுவிவிடலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஒரு கப் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வழக்கம் போல தலைக்குளித்து முடித்ததும் கடைசியாக வினிகரை கலந்து வைத்திருக்கும் தண்ணீரைக் கொண்டு தலையில் அனைத்து பாகங்களிலும் படுமாறு ஊற்ற வேண்டும். இதன் பிறகு தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டாம் . இதனை வாரத்தில் ஒரு நாள் செய்திடுங்கள். இது செய்யும் போது சல்ஃபேட் இல்லாத அல்லது சல்ஃபேட் அளவு குறைவாக இருக்கிற ஷாம்புவை பயன்படுத்தவும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் இது உங்கள் தலைமுடிக்கு வறட்சியை ஏற்படுத்திவிடும் என்பதால் சற்று ஜாக்கிறதையாக கையாள வேண்டியது அவசியம்.

புதினா இலைகள் :

புதினா இலைகள் :

ஒரு கப் அளவுள்ள தண்ணீரில் நிறைய புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள். சுமார் பத்து நிமிடம் வரை நன்றாக கொதிக்கட்டும். தண்ணீரின் நிறம் அடர் பச்சை நிறமாக மாறும் வரை காத்திருங்கள். இலைக்களில் இருக்கிற சாறு அத்தனையும் தண்ணீரில் கலந்திட வேண்டும். பின்னர் அந்த தண்ணீரை தலை முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் வரை காத்திருந்து கழுவிட வேண்டும். வேண்டுமானால் புதினா இலைகளை மைய பேஸ்ட்டாக அரைத்து ஹேர் பேக்காக போட்டு கழுவிடலாம்.

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில் :

ஒரு கப்பில் இரண்டு ஸ்பூன் அளவு ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொண்டு லேசாக சூடுபடுத்திக் கொள்ளுங்கள். அதிகமாக சூடுபடுத்த வேண்டாம். இந்த எண்ணெயை அலர்ஜி ஏற்பட்டிருக்கும் இடங்களில் தடவி ஒரு மணி நேரம் வரை காத்திருந்து பின்னர் ஷாம்பு போட்டு கழுவிடலாம். இதனை வாரத்தில் மூன்று நாட்கள் வரை செய்திடலாம்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

ஓட்ஸை அரைத்து பேஸ்ட்டாக்கி அதனை தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். அதை தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்திடுங்கள். உங்களுக்கு தலையில் ஏற்பட்டிருக்கும் அலர்ஜியை நீக்குவதுடன் பொடுகுத் தொல்லையையும் நீக்கிடும். இதனை வாரத்தில் ஒரு நாள் செய்திடுங்கள்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

வழக்கமாக க்ரீன் டீ தயாரிப்பது போல தயாரித்து கொள்ளுங்கள். அதில் இனிப்பு மட்டும் சேர்க்க வேண்டாம். அதை தலைக்குளித்து முடித்ததும் க்ரீன் டீ கலந்து வைத்திருக்கிற தண்ணீரை அப்படியே தலையில் ஊற்றி அலசிடலாம். அதன் பிறகு மறுபடியும் தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும் என்ற அவசியமில்லை. இதனை வாரத்தில் மூன்று நாட்கள் வரை செய்திடலாம்.

You May Like This